பெராரி கார் பராமரிப்பு மையம் பெங்களூரில் …
இத்தாலியை சேர்ந்த சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் நிறு வனமான 'பெராரி' இந்தியாவில், அதன் முதல் கார் பராமரிப்பு சேவை மையத்தை பெங்களூரின் மீன குண்டே பகுதியில் அமைத்துள்ளது.
பெராரி கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து, விற்பனை செய்யும் 'செலக்ட் கார்ஸ்' நிறு வனம், இதனை இயக்குகிறது.இதன் விற்பனை மையம், டெல்லியில் அமைந்துள்ளது. இந்த நிறு வனம், பெராரி நிறுவன டீலராக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த கார் பராமரிப்பு சேவை மையத்தை துவக்கி உள்ளது.
இங்கு, பணிபுரியும் கார் பராமரிப்பாளர்கள், பெராரி நிறுவனத்தால் சான்றிதழ் வழங்கப்பட் டவர்கள். சொகுசான அனுபவத்தை வாடிக்கை யாளர்களுக்கு வழங்க, இந்த மையம் பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுமையான கார் பராமரிப்புக்கு '360 டிகிரி கார் கேர்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
0
Leave a Reply